கொடைக்கானல் கூக்கால் ஊராட்சியில் தொடர் காய்ச்சல் - மக்கள் அவதி

எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் மேல்நிலைநீர்தேக்க தொட்டியை சுத்தம் செய்தபோது பாம்பு, குருவி இறந்த கிடந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூக்கால் ஊராட்சி, உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ந்து மர்மகாய்ச்சல் பரவி வந்துள்ளது. இதனையடுத்து, பரிசோதனை செய்த மருத்துவர்கள் தண்ணீர் மூலம் காய்ச்சல் வந்துள்ளதாக தெரிவித்தனர். அப்போது, பல ஆண்டுகளாக மேல்நிலை நீர்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியை ஊழியர்களை வைத்து சுத்தம் செய்யப்பட்டது. அப்போது, இறந்து கிடந்த பல்லி, பாம்பு, குருவி மற்றம் சகதிகளை அகற்றினர். இந்த காட்சிகள் தற்போது வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

Night
Day