கேரளாவில் குரங்கம்மை - தமிழக எல்லையில் உஷார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நிபா வைரஸ் மற்றும் குரங்கு அம்மை எதிரொலியாக தமிழக - கேரள எல்லை பகுதிகளில் சோதனை சாவடிகளில் மருத்துவ குழுவினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

கேரளாவில் நிபா வைரஸ் காரணமாக இளைஞர் உயிரிழந்ததை அடுத்து மலப்புரத்தில் ஒருவருக்கு குரங்க அம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக - கேரள எல்லையில் மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோவை வாளையார், வேலந்தாவளம் உள்ளிட்ட 13 சோதனை சாவடிகளில் சுகாதார துறையினர் தற்காலிக முகாம்களை அமைத்துள்ளனர். கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் வருவோருக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் யாருக்கேனும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் அவரை கேரளாவிற்கு திருப்பி அனுப்புவதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Night
Day