எழுத்தின் அளவு: அ+ அ- அ
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் உயர் ரத்தம் அழுத்தம் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் கடந்த 7ம் தேதி முதல் நேற்று வரை சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் கே.என்.நேருவின் சகோதர் ரவிச்சந்திரன் வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. ரவிச்சந்திரனின் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சட்டவிரோத பண பரிமாற்றம், சிபிஐ வழக்கு தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. ரவிச்சந்திரனிடம் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை செய்த அதிகாரிகள் அவற்றை வீடியோகவும், எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்தனர். இந்நிலையில் ரவிச்சந்திரனுக்கு திடீரென ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம் காரணமாக லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.