கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி தொடங்கியது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 61-வது மலர்கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியது.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா இன்று பிரையண்ட் பூங்காவில் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற உள்ள இந்த கோடை விழா மற்றும் மலர் பகண்காட்சியை முன்னிட்டு, டேலியா, மேரி கோல்ட், சால்வியா, ரோஜா மற்றும் துளிப் உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் லட்சக்கணக்கில் பூத்துக் குலுங்குகின்றன. இதேபோன்று 70 ஆயிரம் கொய் மலர்களைக் கொண்டு மயில், சேவல், நெருப்புக்கோழி, உள்ளிட்ட தத்ரூப உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த கோடை விழாவில் நாய் கண்காட்சி, படகு போட்டி, படகு அலங்கார போட்டி, உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் இடம்பெற உள்ளது.

Night
Day