கொடைக்கானல்: முறையாக குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து சாலை மறியல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே முறையாக குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வில்பட்டி கிராமம், ரெட்டியார்புரம் சத்யா காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஊராட்சி நிர்வாகம் முறையாக தண்ணீர் வினியோகிக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளுடன், காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Night
Day