கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை குறைவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெரிய வெங்காயம் 24 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது கிலோவுக்கு ஏழு ரூபாய் குறைந்து 17 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி கிலோவுக்‍கு 4 ரூபாய் குறைந்து 24 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 5 ரூபாய் குறைந்து ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று கேரட் கிலோவுக்‍கு 10 ரூபாய் குறைந்து 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாட்களை ஒப்பிடும்போது காய்கறிகளின் விலை கிலோவுக்கு இரண்டு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை குறைந்துள்ளது.

Night
Day