கோயம்பேடு முதல் ஆவடிக்கு மெட்ரோ ரயில் வழித்தடம் - டெண்டர் கோரியது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


கோயம்பேட்டில் இருந்து ஆவடிக்கு மெட்ரோ ரயில் வழித்தடம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது. சென்னையில் புறநகர் பகுதிகளை இணைக்கும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் கோயம்பேடு முதல் ஆவடி வரையிலான மெட்ரோ சேவைக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது. இதன்படி, கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம் முகப்பேர் வழியாக ஆவடி வரை 16 புள்ளி பூஜ்ஜியம் ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கு வழித்தடத்தை நீட்டிப்பது குறித்து திட்ட அறிக்கை தயார் செய்யப்படவுள்ளது.

Night
Day