கோயில் திருவிழா நடத்த எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

'கோயில் திருவிழாவை தங்கள் தலைமையில் தான் நடத்த வேண்டும்' என்று எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம், ஜமீன் இளம்பிள்ளை பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவை நடத்தக் கோரிய வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குறிப்பிட்ட சாதியினர் தங்கள் தலைமையில் தான் திருவிழா நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருவதால், அறநிலையத்துறை தரப்பில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படாததால் அறநிலையத் துறையே விழாவை நடத்தும் என முடிவெடுக்கப்பட்டதாக வாதங்கள் முன்வைக்கப்பட்டது.  இதையடுத்து, திருவிழாவில் பங்கேற்க ஒவ்வொரு பிரிவினருக்கும் உரிமை உண்டு, தங்கள் தலைமையில் தான் திருவிழா நடத்தவேண்டுமென எந்த சாதியினரும் உரிமை கோர முடியாதெனவும் தெரிவித்து நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.  

Night
Day