கோவில்களில் தானமாக வழங்கபட்ட பசுக்கள் விற்கப்பட்டது குறித்த வழக்கு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்களில், எத்தனை பசுக்கள் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்து பதிலளிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்கள் பால் கொடுப்பதை நிறுத்தியபிறகு அடிமாடுகளாக விற்கப்பட்டுள்ளதாக மனுதாரர் குற்றம் சாட்டினார். இதனை கேட்ட நீதிபதிகள், தானமாக பெற்ற பசுக்களை கோவில்கள் தான் பராமரிக்க வேண்டும் என்றும் தனி நபர்களுக்கு வழங்கப்பட்ட பசுக்கள் அவர்களிடம் இருக்கின்றனவா, அவற்றை யார் கண்காணிப்பர் என கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக உரிய அறிக்கை அளிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Night
Day