கோவையில் இருந்து திருச்சி செல்லும் அரசு பேருந்தில் 3 மடங்கு அதிக கட்டணம் வசூல்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவையில் இருந்து திருச்சி செல்லும் அரசு பேருந்தில் சுமார் 3 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்‍கப்பட்டதால் 
பேருந்தில் சென்ற பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். 

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்தில் சூலூரில் இருந்து காங்கேயம் செல்வதற்கு வழக்கமாக 40 ரூபாய் கட்டணத்துக்‍கு பதிலாக 110 ரூபாய் வசூலிக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து ஓட்டுனரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி உள்ளது. மேலும் குளிர்சாதனப் பேருந்துக்கு வசூலிக்கும் கட்டணத்தை சாதாரண பேருந்தில் வசூலிப்பதாக பயணி ஒருவர் குற்றம்சாட்டினார். குளிர்சாதன பேருந்தில் பயன்படுத்தப்படும் பயணச்சீட்டு இயந்திரத்தை இந்த பேருந்தில் பயன்படுத்துவதால் கட்டணம் அதிகமாக இருந்ததாக ஓட்டுனர் ஒப்புக்கொண்டார். 

Night
Day