கோவையில் உள்ள TVH உரிமையாளர் மணிவண்ணன் இல்லத்தில் அமலாக்‍கத்துறையினர் சோதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மசக்காளிபாளையம் பகுதியில் அமைச்சர் நேருவின் சகோதரரும், TVH உரிமையாளருமான மணிவண்ணன் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அவருடைய கட்டுமான நிறுவனம் கோவை திருச்சி சாலை, அவிநாசி சாலை உட்பட பல்வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. இது தவிர சென்னை, திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கோவையில் உள்ள  TVH நிறுவனத்தை மணிவண்ணன் கவனித்து வருவது குறிப்பிடத்தக்‍கது.

Night
Day