கோவை, நீலகிரி உட்பட 4 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சி காரணமாக, தமிழகத்தில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், திண்டுக்கல், தேனி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், மதுரை, சிவகங்கை புதுக்கோட்டை ஆகிய 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சி, மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Night
Day