கோவை ஆன்லைன் மூலம் மோசடி செய்வதாக எம்எல்எம் நிறுவனம் மீது புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை அருகே ஆன்லைன் எம்எல்எம் நிறுவனத்திற்கு ஆதரவாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையை சேர்ந்த நிறுவனம் ஒன்று அதன் செயலி மூலம் விளம்பரத்தை பார்த்தால் அதிக வருமானம் தருவதாகக்கூறி ஏமாற்றுவதாகவும், மருத்துவர்களின் பரிந்துரையின்றி ஆயுர்வேத மாத்திரைகளை வழங்குவதாகவும், சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் முத்து என்பவர் கோவை சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் அந்த நிறுவனத்திற்கு ஆதரவாக நீலாம்பூர் அருகே அந்த நிறுவனத்தில் பணம் செலுத்திய ஏராளமானோர் திரண்டனர். மேலும் அந்த நிறுவனம் எந்த மோசடியும் செய்யவில்லை எனவும் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Night
Day