கோவை ஈஷா யோகா மையத்தில் "மஹா சிவராத்திரி விழா"

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை ஈஷா யோகா மையத்தில் 31வது ஆண்டு மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

பிரம்மாண்டமாக நடைபெற்ற மஹா சிவராத்திரி விழாவில் தலைமை விருந்தினராக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பங்கேற்றார். தொடர்ந்து, ஈஷா யோகா மையத்தில் உள்ள சூரிய குண்டத்தில் அமித்ஷா வழிபாடு செய்தார். அதன்பின், 'பேட்டரி' வாகனத்தை சத்குரு இயக்க, முன்னிருக்கையில் அமித் ஷா அமர்ந்து மேடைக்கு வந்தனர். தொடர்ந்து, அவர் 'மஹா யோகா யக்னா' தீபத்தை ஏற்றிய பிறகு, தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சியில், சவுண்ட்ஸ் ஆப் ஈஷா மாணவர்கள், இந்திய ஆன்மிக பாடல்களைப் பாடி சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உள்ள ஜெர்மனியின் காஸன்ட்ரா மே உள்ளிட்ட இசைக்கலைஞர்களின் இசை, பார்வையாளர்களை, பரவசத்தில் ஆழ்த்தியது. இடையிடையே சத்குரு நடனமாடிய போது, பார்வையாளர்களின் ஆரவாரம் உச்சத்துக்கு சென்றது.

Night
Day