கோவை பொள்ளாச்சி அருகே காட்டு யானை தாக்கியதில் ஜொ்மனி நாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழப்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே காட்டு யானை தாக்கியதில் ஜொ்மனி நாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழந்தாா்.

பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் உள்ள நீர்வீழ்ச்சி அருகே காட்டு யானை ஒன்று நின்றுகொண்டிருந்ததால், அவ்வழியாக சென்ற அனைத்து வாகனங்களும் நின்றுக்கொண்டிருந்தது. அப்போது, பொள்ளாச்சிக்கு சுற்றுலா வந்த ஜொ்மனி நாட்டைச் சோ்ந்த மைக்கேல் என்பவர் ஆபத்தை உணராமல் யானைக்கு அருகாமையில் இருசக்கர வாகனத்தில் சென்றார். இவர் வருவதை கண்ட யானை, தனது தும்பிக்கையால் இருசக்கர வாகனத்துடன் அந்த நபரை கீழே தள்ளியது. 

அப்போது, அங்கிருந்து ஓட முயன்ற மைக்கேலை விடாமல் துரத்திச்சென்று யானை தாக்கியது. இதில் படுகாயமடைந்த நபரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

varient
Night
Day