கோவை - யானையின் உடல்நிலையில் முன்னேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மருதமலை அடிவாரத்தில் உடல் நலக்குறைவால் படுத்து இருந்த யானையை கிரேன் மூலம் நிறுத்தி வைத்து வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோவை மருதமலை அடிவார வனப்பகுதியில் நேற்று காலை உடல் நலக்குறைவால் படுத்திருந்த பெண் காட்டு யானைக்கு வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர் குழுவினர் 2வது நாளாக இன்று காலை முதல் குளுக்கோஸ்,நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் நீர்ச்சத்து உணவுகள் கொடுத்து சிகிச்சை அளித்து வந்தனர். யானையின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து கிரேன் மூலமாக காட்டு யானை தூக்கி நிறுத்தி வைக்கப்பட்டது. சோர்வாக காணப்பட்ட யானை மீண்டும் உடல் நலம் தேறி வருகிறது. அங்கிருந்த 4 மாத குட்டியானை தாய் யானையிடம் பால் குடித்தது. அதனைத் தொடர்ந்து பெண் காட்டு யானைக்கு கொடுக்கப்பட்ட உணவை சீராக எடுக்க தொடங்கியுள்ளது.

Night
Day