கோவை : MY V3 add நிறுவன உரிமையாளர் கைது - ஆதரவாளர்கள் 70-க்கும் மேற்பட்டோர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


கோவையில் கைதான MY V3 Ads நிறுவனத்தின் உரிமையாளர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். MY V3 Ads நிறுவனம் கோடிக்கணக்கில் மக்களிடம் பணம் பெற்று மோசடி செய்வதாக கோவையில் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தங்களது நிறுவனம் மீது போலியாக வந்ததி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தார். ஆணையரை சந்திக்க முடியாத சூழலில், ஆணையரை சந்தித்து மனு அளித்த பிறகே செல்வோம் என கூறி சக்தி ஆனந்த் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் சக்தி ஆனந்த் உட்பட 70-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Night
Day