கோவை: ஈஷா அவுட்ரீச் சார்பில் அதிநவீன மண் பரிசோதனை ஆய்வுக்கூடம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை பலுவப்பட்டியில் உள்ள ஈஷா அவுட்ரீச் சார்பில் விவசாய நிலத்திற்கான அதிநவீன மண் பரிசோதனை ஆய்வுக்கூடம் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுத்தவும், மண்ணின் தரத்தை உயர்த்தவும் ஈஷா அவுட்ரீச் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மிகப்பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஆய்வுக் கூடத்தில், மண்ணின் தரத்தை அரிய, அதிநவீன கருவிகளும், தொழிற்நுட்ப வல்லுநர்களும் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் ஈஷா அவுட்ரீச்சின் கீழ் இயங்கும், 25 உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உழவன் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்த மண் காப்போம் என்ற இருசக்கர வாகன பேரணியும் ஆதியோகி  முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது.

Night
Day