கோவை: கோழிக்கமுத்தி முகாமில் இருந்த 20 வளர்ப்பு யானைகள் இடமாற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடும் வறட்சி காரணமாக கோவை மாவட்டம் டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்த 20 யானைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. கோழிக்கமுத்தி பகுதியில் உள்ள கும்கி யானைகள் வளர்ப்பு முகாமில் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடும் வெயில் காரணமாக நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு போனதால், கோழிக்கமுத்தி முகாமில்  இருந்த 20 வளர்ப்பு யானைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. அதன்படி மானாம்பள்ளி எஸ்டேட் பகுதிக்கு கலீம் யானை, பேபி, காவேரி உள்ளிட்ட யானைகளும், மற்ற யானைகள் வரகளையறு, சின்னாறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டன. 6 யானைகள் மட்டும் கோழிக்கமுத்தி முகாமிலேயே பராமரிக்கப்படுகின்றன. 

varient
Night
Day