கோவை: நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் காரமடை நகர்மன்ற கூட்டத்தில் விவாதமின்றி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரமடை நகராட்சியில் மாதாந்திர நகர்மன்ற கூட்டம் தலைவர் உஷா வெங்கடேஷன் தலைமையில் நடைபெற்றது. பொது விவாதத்திற்கு 45 தீர்மானங்கள் வைக்கப்பட்ட நிலையில், முதல் தீர்மானம் வாசிக்கப்பட்டதும் தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே நகர்மன்ற தலைவர் விவாதமின்றி அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. கண் துடைப்புக்காக நகர்மன்ற கூட்டம் நடத்தப்படுவதாகவும், கடந்த 2 ஆண்டுகளில் தங்கள் பகுதியில் எவ்வித அடிப்படை வசதியுமே செய்யப்படவில்லை என கூறியும் கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Night
Day