கோவை: நோயாளிகளிடம் ரூ.1.5 கோடி வரை மோசடி செய்த ஓய்வு பெற்ற அரசு மருத்துவர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒன்றரை கோடி ரூபாயுடன் தலைமறைவான கைராசி மருத்துவரிடம் இருந்து தங்களது பணத்தை பெற்றுத்தரக்‍கோரி பாதிக்‍கப்பட்ட பொதுமக்‍கள் கோவை,காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். கோவை சுங்கம் பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் சித்தையா. இவர் கடந்த 1987-ம் ஆண்டு முதல் கோவை அரசு மருத்துவமனையில் இருதயத் துறை தலைவராக பணியாற்றியுள்ளார். 
கடந்த 2003-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்ற சித்தையா, கோவையில் 3 இடங்களில் தனியாக கிளினிக் வைத்து நடத்தி வந்துள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் 12 ஆண்டுகளாக தன்னிடம் பணியாற்றிய இ.சி.ஜி டெக்னீசியன் விஜயலட்சுமி அவரது பேத்தி உள்ளிட்ட ஏராளமான நோயாளிகள், மருந்தக பிரநிதிகள் என பலரிடமும் ஒன்றரை கோடி ரூபாய் வரை கடன் வாங்கி மோசடி செய்ததாக பாதிக்‍கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

Night
Day