கோவை: விவசாய நிலத்திற்குள் புகுந்து மரங்களை சேதப்படுத்திய யானை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் தடாகம் அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு யானை குழாய்களை சேதப்படுத்தி தாகத்தை தீர்த்துக் கொண்ட கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகி உள்ளது. பொன்னூத்து அம்மன் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று, தாளியூர் பகுதிக்குள் நுழைந்துள்ளது. அங்கு மலர்விழி என்பவருடைய விவசாய நிலத்திற்குள் புகுந்த யானை, தண்ணீர் குழாய்களை சேதப்படுத்தி தாகம் தீர்த்து கொண்டது. மேலும், அருகில் இருந்த தென்னை மற்றும் பாக்கு மரங்களையும் சேதப்படுத்தியது. தகவலறிந்து சென்ற வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். 

Night
Day