தமிழகம்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சூப்பர் குட் சுப்பிரமணி - பண உதவி கேட்டு வீடியோ வெளியீடு...
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி, தனது சிகி...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த வால்பாறை கொண்டை ஊசி மலைப்பாதையில் வேன் கவிழ்ந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் 31 பேர் படுகாயம் அடைந்தனர். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 35 பேர் ஐந்து நாள் பயணமாக கேரளா உட்பட பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்துவிட்டு வால்பாறை வழியே நேற்றிரவு பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர். இதனிடையே குரங்கு அருவி அருகே வந்து கொண்டிருந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 31 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை அவ்வழியே வந்த பொதுமக்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி, தனது சிகி...
"Tourist Family" படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்?...