சக ஊழியர்கள் 5 பேரின் பணி நீக்கத்தைக் கண்டித்து தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் 5 பேரின் பணி நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி பகுதியில் குப்பை சேகரிக்கும் போது கிடைக்கும் இரும்பு பொருட்கள், தேங்காய் ஓடு, பால் கவர், பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்டவைகளை மற்ற கடைகளில் போடக்கூடாது என ஒப்பந்த நிறுவன ஊழியர் தெரிவித்துள்ளார். குறைவாக ஊதியம் பெறும் நிலையில், குப்பைகளை மற்ற கடைகளில் போடுவதால் கிடைக்கும் பணம் தங்களின் வாழ்க்கை பெரிதும் உதவுவதாக ஊழியர்கள் தெரிவித்தும், அவர்களை ஒப்பந்த நிறுவன பணியாளர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், குப்பை சேகரிக்கும் போது கிடைக்கும் பொருட்களை வெளியே விற்பனை செய்ததாக 5 தூய்மை வாகன ஓட்டுனர்களை தனியார் ஒப்பந்த நிறுவனம் பணி நீக்கம் செய்தது. இதைத்தொடர்ந்து 5 பேரின் பணிநீக்கத்தை ரத்து செய்யக்கோரி 50க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Night
Day