எழுத்தின் அளவு: அ+ அ- அ
மற்ற மாநிலங்களில் நிதி ஒதுக்குவது போல் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை என அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் சட்டபேரவையில் பகிரங்கமாக கூறியிருப்பது விளம்பர அரசின் செயலற்ற திறனை அம்பலப்படுத்தியுள்ளது.
தமிழக சட்டபேரவையில், இன்று கேள்வி நேரத்தின் போது துணைக் கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், நீலகிரி மாவட்டம் கூடலூரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைத்துத் தரப்படுமா எனக் கேட்டார். இதற்கு பதிலளித்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மற்ற மாநிலங்களில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு நிதி ஒதுக்கப்படுவது போல், தமிழகத்தில் நிதி ஒதுக்கப்படுவதில்லை என்றும், மற்ற மாநிலங்களைப் போல் அனைத்து தொழில்நுட்ப பூங்காக்களும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். தொழிற்பூங்கா சார்ந்த அனைத்து அதிகாரங்களும் தொழில்துறையின் கீழ் உள்ளதால், நிதி, திறன், அதிகாரம் உள்ள துறையில் கோரிக்கை வைக்குமாறு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்தார்.
இதன் மூலம் விளம்பர திமுக அரசு, தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பது அதன் மூலம் தொழில் வளர்ச்சி செய்வதில் பெரும் தொய்வில் உள்ளது தெரிய வந்துள்ளது. தனது துறை சார்ந்த ஆதங்கத்தை பேரவையிலேயே அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளிப்படையாக பேசியுள்ளது திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.