எழுத்தின் அளவு: அ+ அ- அ
சட்டமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு அருகே உள்ள அண்ணல் அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சட்டமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு அருகே அமைந்துள்ள அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அண்ணல் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கு திரண்டிருந்த கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார்.
இந்த பெருமைக்குரிய நிகழ்ச்சியில், புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா வழிவந்த கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.