காவல்துறையினர் ஒட்டிய சம்மனை படிப்பதற்காகதான் கிழிக்க சொன்னதாக சீமானின் மனைவி கயல்விழி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டு முன் செய்தியாளர்களை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்விழி சந்தித்தார். அப்போது பேசிய அவர், சீமான் வீட்டில் இல்லை என்று தெரிந்தே காவல்துறையினர் சம்மனை ஒட்டிச் சென்றதாக குற்றம் சாட்டினார். காவல்துறையினர் ஒட்டிய சம்மனை படிப்பதற்காகவே கிழிக்க சொன்தாக கூறிய அவர், தங்களைவிட தங்களுடன் இருப்பவர்கள் மீது கை வைத்தால் கோபம் வரும் என்று எச்சரித்தார்.
தங்களை மனரீதியாக துன்புறுத்தும் நோக்கிலேயே போலீசார் செயல்படுவதாக குற்றம் சாட்டிய கயல்விழி, கணவர் சீமானை அசிங்கப்படுத்தும் நோக்கிலேயே காவல்துறை செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
சம்மன் கிழிப்பு விவகாரத்தில் நடந்தது தெரியாமல் மன்னிப்பு கேட்டுவிட்டதாக கூறிய அவர், நடிகையையும், அதிகாரிகளையும் ஆளும் திமுகதான் இயக்குகிறது என்றும் வழக்கு விசாரணைக்கு சீமான் நிச்சயம் ஆஜராவார் தெரிவித்தார்.