சவரன் ரூ.58,000-ஐ கடந்தது

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 640 ரூபாய் உயர்ந்து மீண்டும் 58 ஆயிரத்தை கடந்துள்ளதால் நகைபிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார அடிப்படையில் தினசரி தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. கடந்த சில வாரங்களாகவே 58 ஆயிரத்திற்கும் கீழ் நிலவி வந்த தங்கம் விலை, கடந்த இரண்டே நாட்களில் ஆயிரத்து 240 அதிகரித்து, மீண்டும் 58 ஆயிரத்தை கடந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து 58 ஆயிரத்து 280 ரூபாய்க்கும், கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 285 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து 103 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Night
Day