சவரன் ரூ.58,000-ஐ நெருங்கிய தங்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு இன்று ஒரே நாளில் 640 ரூபாய் உயர்ந்து 57 ஆயிரம் ரூபாயை கடந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அந்தவகையில், ஆபரணத் தங்கம் சவரனுக்கு இன்று ஒரே நாளில் 640 ரூபாய் உயர்ந்து 57 ஆயிரத்து 920 ரூபாய்க்கும், கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 105 ரூபாய்க்கும்,  கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் சவரனுக்கு 57 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் நகை பிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Night
Day