சாதனைப் படைத்த இளம்பெண் காம்யா கார்த்திகேயனுக்கு புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

உலகின் ஏழு கண்டங்களில் உள்ள உயரமான ஏழு சிகரங்களிலும் ஏறி சாதனை படைத்துள்ள மும்பையை சேர்ந்த இளம்பெண் காம்யா கார்த்திகேயனுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, 



உலகின் ஏழு கண்டங்களில் உள்ள உயரமான ஏழு சிகரங்களிலும் ஏறி சாதனை படைத்துள்ள மும்பையை சேர்ந்த இளம்பெண் காம்யா கார்த்திகேயனுக்கு, இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். தனது இளம் வயதில் உலகின் மிக உயர்ந்த மலைச் சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய பெண்கள் பட்டியலில், இந்தியளவில் முதல் இடத்தையும், உலகளவில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ள காம்யா கார்த்திகேயன் இன்னும் பல அரிய சாதனைகளை செய்து வெற்றிபெற தனது மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day