சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரம் பகுதியில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பட்டாசு தொழிலில் ஈடுபட்டுவரும் ஏழை, எளிய, சாமானிய தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும் ஒரு நிரந்தர தீர்வினை காண வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசை புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் இரண்டு அறைகள் முற்றிலும் தரைமட்டமானதில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்துகளால், தொடர்ந்து ஏற்படும் உயிரிழப்புகள் பற்றி துளியும் கவலைப்படாத இந்த விளம்பர அரசுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் செயல்படுகின்ற பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வயிற்றுப்பிழைப்புக்காக வேலைக்கு செல்லும் ஏழை, எளிய, சாமானிய தொழிலாளர்களின் விலைமதிப்பற்ற உயிர்கள் இன்றைக்கு கேட்பாரற்று கிடக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது - திமுக தலைமையிலான அரசு பட்டாசு ஆலைகளில் விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்கு எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் வேடிக்கை மட்டும் பார்க்கிறது - மேலும், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள அப்பாவி தொழிலாளர்களின் உயிர்கள் பறிபோவதுபற்றி திமுக அரசுக்கு எந்தவித கவலையும் இல்லை - மாறாக, உயிரிழப்பு ஏற்பட்டவுடன் அதற்கு இழப்பீடு கொடுத்து விட்டால் மட்டும் போதும் என்று நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல், விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 65க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் விபத்துகள் நடந்துள்ளதாகவும், 120க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இறந்துள்ளதாகவும், 150க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன - திமுக தலைமையிலான ஆட்சியில் பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது - இந்த தனியார் பட்டாசு ஆலையில் உரிய பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படாததும், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததுமே உயிரிழப்புகள் ஏற்பட காரணம் என செய்திகள் தெரிவிக்கின்றன - பட்டாசு தொழில் நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கின்றனவா? என்பது குறித்து தமிழகஅரசு முறையான ஆய்வுகள் எதையும் செய்வதில்லை என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.  

அதேபோன்று தற்போது வெடிவிபத்து நிகழ்ந்த தனியார் பட்டாசு ஆலையை, இருவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்ததாக செய்திகள் வருகின்றன - இவ்வாறு பட்டாசு ஆலைகளை குத்தகைக்கு எடுத்து நடத்துவது என்பது சட்டவிரோதமானது - இதை திமுக அரசு கண்டும் காணாமல் வேடிக்கை பார்ப்பது மிகவும் கண்டனத்திற்குரியது - தமிழகத்தில் இதுபோன்று வேறு ஏதாவது பட்டாசு ஆலைகள் குத்தகைக்கு எடுத்து நடத்தப்படுகிறதா? என்பதை உடனே கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். திமுக தலைமையிலான அரசு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மீது காட்டும் அக்கறையைப் பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதில் காட்டுவதில்லை - பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளாத அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர்கள் கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழக அரசு அவ்வாறு முறையான ஆய்வுகளையும், கண்காணிப்புகளையும் சரிவர செய்து இருந்தால் இதுபோன்று தொடர்ந்து அப்பாவி உயிர்களை இழந்து இருக்க மாட்டோம் என புரட்சித்தாய் சின்னம்மா வேதனை தெரிவித்துள்ளார்.  

புரட்சித்தலைவி அம்மா 2011 ஆம் ஆண்டு பட்டாசு தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, 'குட்டி ஜப்பான்' என்று அழைக்கப்படும் சிவகாசியில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பட்டாசு பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார் - ஆனால் திமுக தலைமையிலான ஆட்சியில் அதற்கு போதிய அலுவலர்கள் நியமிக்கப்படாததால் தற்போது இந்த பயிற்சி மையம் செயல்பாடு இன்றி காட்சி பொருளாகவே இருந்து வருகிறது - திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக்கொண்டது முதல் எல்லாவற்றிலும்  அலட்சியப்போக்கினை கடைபிடிப்பதாலும், மக்களை மறந்து சுயநலப்போக்கோடு செயல்படுவதாலும் தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி கடும் பாதிப்படைந்து வருகிறார்கள் - எனவே திமுக தலைமையிலான அரசு எஞ்சியிருக்கும் காலத்திலாவது, தமிழகமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முன் வர வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா கேட்டுக் கொண்டுள்ளார். 

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், இந்த விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவரும் விரைவில் குணமடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். திமுக தலைமையிலான அரசு, உடனடியாக அரசு அலுவலர்கள் அடங்கிய குழுவை நியமித்து தமிழகத்தில் உள்ள அனைத்து பட்டாசு தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள், குடோன்கள் ஆகியவற்றில் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு, பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் ஏற்படாமல் தடுக்கவும், பட்டாசு தொழிலில் ஈடுபட்டுவரும் ஏழை, எளிய, சாமானிய தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும் ஒரு நிரந்தர தீர்வினை காண வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசை புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.

Night
Day