சாந்தனின் மரணம்கூட ஒரு சட்ட கொலைதான்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

32 ஆண்டுகளுக்கு மேலான சட்ட போராட்டப் பயணம் சாந்தன் மரணத்தை பார்க்கவா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்... சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள சாந்தன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியபின் செய்தியாளர்களை சந்தித்த அவா், விடுதலை விடுதலை என போராடி சாந்தனுடைய மரணத்தை தான் பார்த்து உள்ளோம் என்றும் சாந்தனின் மரணம்கூட ஒரு சட்ட கொலைதான் என்றும் கூறினார்.. தொடர்ந்து பேசிய அவா், மீதி இருக்கும் மூன்று பேரையும் இந்த நிலைக்கு தள்ளாமல், அவரவர் விரும்பிய நாட்டுக்கு விரைவில் அனுப்ப வேண்டும் என்றும் சீமான் கோரிக்கை விடுத்தார்.

Night
Day