சாம்சங் ஊழியர்கள் மீது காவல்துறை அடக்குமுறை

எழுத்தின் அளவு: அ+ அ-

 காஞ்சிபுரம் மாவட்டம் சிறுமாங்காடு பகுதியில் சாம்சங் போராட்டகாரர்களின் பந்தல்களை வருவாய் துறை இரவோடு இரவாக அகற்றிய நிலையில், அதே இடத்தில் ஊழியர்கள் மீண்டும் போராட்டதை தொடங்கிய ஊழியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

சாம்சங் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி முதல் தொழிற்சங்கம் அங்கீகாரம், போனஸ் , ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 25 நாட்களுக்கும் மேலாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் சாம்சங் ஊழியர்களுக்கு ஆதரவாக அவர்களை சந்திக்க இருக்கும் நிலையில், இன்று அதிகாலை 2 மணி அளவில் சாம்சங் சங்கத்தின் தலைவர்கள் இல்லங்களுக்கு சென்று அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுமாங்காடு பகுதியில் சாம்சங் போராட்டகாரர்களின் பந்தல்களை வருவாய் துறை இரவோடு இரவாக அகற்றினர். இந்நிலையில் பந்தல் அகற்றப்பட்ட அதே இடத்தில் போராட்டக்காரர்கள் இன்று மீண்டும் போராட்டத்தை தொடங்கியதால் வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்த போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போலீசார் கைது செய்ய முயன்ற போது கைகளை கோர்த்துக்கொண்டு ஊழியர்கள் மனித சங்கிலியாக மாறியதால், தரதரவென காவல்துறையினர் இழுத்துச் சென்றனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சாம்சங் ஊழியர்கள் அடுத்தடுத்து மயக்கமடைந்தனர்.

இதனிடையே ஒற்றுமையுடன் போராடும் தங்களை 4 பிரிவுகளாக போலீசார் பிரித்து வைத்து சூழுச்சி செய்துள்ளனர் என்றும் இந்த ஜனநாயக நாட்டில் தங்களுக்கு போராட உரிமையில்லையா என சாம்சங் போராட்ட குழுவினர் வேதனையுடன் கேள்வியெழுப்பியுள்ளனர்.

அமைச்சர் தங்களது கோரிக்கைகளை புரிந்து கொண்டாரா அல்லது புரிந்து கொண்டது போல் நடிக்கிறாரா என சிஐடியூ மாநில தலைவர் சௌந்தரராஜன்  கேள்வியெழுப்பியுள்ளார். அரசு  கார்ப்ரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்படுவது எந்த விதத்தில் நியாயம் என்றும் தவறு என்றும் காவல்துறையினர் இரவு முழுவதும் தொழிலாளர்கள் வீடுகளியே சென்று கைது செய்தது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படும் காவல்துறையினரின் அத்துமீறலை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும்  முதலமைச்சர் உஅடனடியாக தலையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


Night
Day