சாம்சங் ஊழியர்கள் மேலும் 13 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சாம்சங் தொழிலாளர்கள் மேலும் 13 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் போராட்டத்ததை தீவிரப்படுத்த தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், மீண்டும் அவர்களுக்கு பணி வழங்க வலியுறுத்தியும், ஊழியர்கள் 16-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் 13 தொழிலாளர்களை பணியிடை நீக்கம் செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், இன்று முதல் காஞ்சிபுரம் அருகே வெள்ளை கேட் பகுதியில் பந்தல் அமைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Night
Day