சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராடிய இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், காவல்துறையின் அடக்குமுறைகளை கண்டித்தும், சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். 

ஊதிய உயர்வு, தொழிற்சங்கம் அமைக்க ஒப்புதல் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது தொழிலாளர்களை வஞ்சிக்கும் நிறுவனத்தை கண்டித்தும், தொழிலாளர்கள் மீது அக்கறையில்லாத திமுக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் தொழிலாளர் நலத்துறை உடனடியாக தலையிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனிடையே, ஆர்பாட்டத்தில் ஊர்வலமாக செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் குண்டுகட்டாக கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Night
Day