சாலையில் கிடந்த பணத்தை போலீசிடம் ஒப்படைத்த சிறுமி மற்றும் அவரது தந்தைக்கு துணை காவல் கண்காணிப்பாளர் பாராட்டு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த சிறுமி மற்றும் அவரது தந்தைக்கு துணை காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார். 


தேவகோட்டையைச் சேர்ந்த ராம்குமார் மற்றும் அவரது மகள் நிஷாந்தினி ஆகியோர் நேற்றிரவு ராம் நகரில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றனர். பிள்ளையார் கோவில் அருகே  சாலையில் ஒரு பை கிடப்பதை சிறுமி நிஷாந்தினி தந்தையிடம் கூறியுள்ளார். அதை எடுத்து பார்த்ததில் பணம் இருப்பதை கண்டு உடனடியாக தேவகோட்டை துணை காவலர் கண்காணிப்பாளர் கௌதமிடம் ஒப்படைத்தனர். போலீசார் அதை பிரித்து பார்க்கையில் ஒரு லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆவணங்கள் இருந்துள்ளன. இதையடுத்து நேர்மையாக நடந்து கொண்ட தந்தை மற்றும் மகளை துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னாடை போர்த்தி பாராட்டினார். 

Night
Day