சாலையில் திரும்பிய ஆட்டோ மீது பைக் மோதி விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சாலையில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம், ஆட்டோ மீது மோதிய பதை பதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

முத்தூரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மோகன பிரசாத் என்ற மாணவன், இரு சக்கர வாகனத்தில் முத்தூர்-கொடுமுடி சாலையில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தார். அப்போது, பெட்ரோல் பங்க் ஓரம் நின்றிருந்த ஆட்டோ சாலையில் திரும்பிய போது, அதன் மீது மோகன பிரசாத்தின் இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், தலையில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

Night
Day