சாலையில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய சிறுவன் - உயிரை பணயம் வைத்து மீட்ட இளைஞர்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அரும்பாக்கத்தில் சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் மின்சாரம் தாக்கி சுருண்டு விழுந்து, உயிருக்கு போராடிய சிறுவனை, அவ்வழியாக சென்ற நபர் ஒருவர் காப்பாற்றும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 16ம் தேதி பெய்த கனமழையால் சென்னை அரும்பாக்கம் பகுதியில் மழை நீர் குளம்போல் தேங்கியது. இந்நிலையில், அன்றைய தினம் முத்தாட்சி அம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த ராபர்ட் என்பவரின் 9 வயது மகன் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திருப்பிக் கொண்டிருந்தார். மங்கள் நகர் 1வது தெரு பகுதியில் தேங்கியிருந்த மழை நீரில் மின்கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல் சிறுவன் நடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் சிறுவன் சுருண்டு விழுந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் துரிதமாக செயல்பட்டு சிறுவனை காப்பாற்றி உள்ளார். மின்சாரம் தாக்கி காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மனிதநேயமிக்க மனிதர் ஒருவர் சிறுவனை காப்பாற்றுவது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

varient
Night
Day