சாலையோரத்தில் உள்ள சிறு ஓடைகள் மற்றும் ஆற்றுப்பகுதிகள் ஆக்கிரமிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தர்மபுரி மாவட்டத்தில், 170 கோடி ரூபாய் செலவில் 4 வழி சாலை அமைக்கும் பணி முழுமையடைய ஓடைகள் மற்றும் ஆற்றுப்பகுதிகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரூரில் இருந்து சேலம் மாவட்டத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை, தற்போது 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 வழி சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையோரத்தில் செல்லும் சிறு ஓடைகள், ஆறுகளை அப்பகுதியை சேர்ந்த தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிரமிப்பு காரணமாக ஓடைகளில் இருந்து வெளியேறும் நீர் சாலைகளுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலை அமைக்கும் பணி முழுமையடைய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து சிறு ஓடைகள் மற்றும் ஆறுகளை மீட்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

Night
Day