எழுத்தின் அளவு: அ+ அ- அ
அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு எழுந்த நிலையில் தமிழர் திருநாளான பொங்கலன்று நடைபெற இருந்த CA பவுண்டேஷன் தேர்வு தேதியை ஐசிஏஐ நிறுவனம் மாற்றி அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் CA பவுண்டேஷன் மாணவர்களுக்கான தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி முதல் 18ஆம் தேதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் CA பவுண்டேஷன் தேர்வுகளான BUSINESS LAWS தேர்வு பொங்கல் பண்டிகையான 14 ஆம் தேதியும், Quantitative Aptitude தேர்வுகள் 16ஆம் தேதியும் மாலை 2 மணி முதல் 5 மணிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் எம்.பி. சு. வெங்கடேசன் ஐசிஏஐ நிறுவன தலைவருக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில், BUSINESS LAWS தேர்வு ஜனவரி 16 ஆம் தேதியும், Quantitative Aptitude தேர்வு ஜனவரி 18 ஆம் தேதியும் Economics தேர்வு ஜனவரி 20 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.