சிங்.துரை இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சையில் நடைபெற்ற சிங். துரை இல்ல திருமண வரவேற்பில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பங்கேற்று மணமக்களுக்கு ஆசி வழங்கி சிறப்பித்தார்.

தஞ்சை தமிழரசி திருமண மஹாலில் நேற்று நடைபெற்ற சிங். துரை இல்ல திருமணவிழாவில் கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கலந்து கொண்டார். அப்போது புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு மணமக்கள் குடும்பத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து மணமேடைக்கு சென்ற அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, சிங். துரையின் மகனும், மணமகனுமான சிங். டி.ஆர். பிரவீன், மணமகள் பி.எல். ஸ்வர்ணமால்யா ஆகியோருக்கு பூங்கொத்து கொடுத்து மணமக்கள் நீடூழி வாழ வாழ்த்து தெரிவித்தார். மணமக்கள் ஆசிபெற்றபோது அவர்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா மலர்தூவி ஆசி வழங்கினார்.

Night
Day