சிதம்பரம் அண்ணாமலை பல்கலை,யில் பதவி இறக்கம், ஊதிய குறைப்பு நடவடிக்கை ரத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை பதவி இறக்கம் மற்றும் ஊதியக் குறைப்பு செய்து அரசு பிறப்பித்த உத்தரவுகளை சட்டவிரோதமானது என அறிவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிதிச்சுமையில் சிக்கிய அண்ணாமலை பல்கலை கழக நிர்வாகத்தை ஏற்ற அரசு, உபரியாக பணியாற்றுவதாக கூறி, ஆயிரத்து 204 ஆசிரியர்களையும், 3 ஆயிரத்து 246 ஆசிரியர் அல்லாத பணியாளர்களை வேறு துறைகளுக்கு மாற்றியதோடு பதவி இறக்கம் மற்றும் ஊதியத்தை குறைத்து உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், எந்த விசாரணையும் நடத்தாமல் பதவி இறக்கமும் ஊதியக் குறைப்பும் செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். 4 வாரங்களில் அவர்களை பழைய பதவிகளில் நியமிக்க வேண்டும் என்றும் பழைய ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Night
Day