சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் : தீட்சிதர் குழுவுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மாற்றங்கள் செய்யப்படுகிறதா என்பதை நேரில் ஆய்வு செய்வோம் என பொது தீட்சிதர் குழுவுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மாநில அளவிலான நிபுணர் குழுவின் ஒப்புதல் பெறாமல் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மாற்றங்களும், கட்டுமானங்கள் மேற்கொள்வதை தடுக்கவும், கணக்குகளை சமர்ப்பிக்கவும் பொது தீட்சிதர் குழுவுக்கு உத்தரவிடக்கோரி இந்து சமய அறநிலையத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது அறநிலையத்துறை சிறப்பு வழக்கறிஞர் அருணன் ஆஜராகி "உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும், கட்டுமான பணிகள் மூலம் கோயிலில் மாற்றங்கள் நடைபெற்று வருவதாகவும், அதுகுறித்து மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்யவும் உத்தரவிடக்கோரினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "ஒப்புதலின்றி சிதம்பரம் நடராஜர் கோயிலில் மாற்றங்கள் மற்றும் கட்டுமானம் செய்யப்படுகிறதா என நேரில் ஆய்வு செய்வோம்" என பொது தீட்சிதர்கள் குழுவுக்கு எச்சரிக்கை விடுத்து, வழக்கை மார்ச் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

Night
Day