எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருநெல்வேலிக்கு அம்மாவின் வழியில் மக்கள் பயணம் மேற்கொண்ட அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, திமுக ஆட்சியில் நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் அரசு நிலத்தை அடமானம் வைத்து AMRL நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுப்பியிருந்த நிலையில், அதன் எதிரொலியாக அந்த நிலத்தை தமிழக அரசு அவசர, அவசரமாக கைப்பற்றியுள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொழிற்பூங்கா அமைப்பதற்காக சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு இந்தப் பகுதிக்கு பெரிய அளவில் தொழிற்சாலைகளை கொண்டு வர திமுக அரசு கவனம் செலுத்தவில்லை. அதனை தொடர்ந்து AMRL என்ற நிறுவனத்துடன் தொழில் தொடங்க ஒப்பந்தம் போட்டது. அந்த நிறுவனம் இந்த பகுதியில் பெரிய அளவில் யாரும் தொழில் தொடங்க முன் வராத காரணத்தினால், அரசின் 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தை வேறொரு நிறுவனத்திற்கு கைமாற்றியுள்ளது. அந்த தனியார் நிறுவனம் அரசின் 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வாங்கி மோசடி செய்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த மாதத்தில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு அம்மாவின் வழியில் மக்கள் பயணம் மேற்கொண்ட கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, இந்த சம்பவம் தொடர்பாக மக்கள் மத்தியில் எடுத்துரைத்தார். வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி மோசடி செய்த திமுகவின் செயல்பாடுகள் குறித்து தோலுரித்து காண்பித்தார்.
புரட்சித்தாய் சின்னம்மா முன்வைத்த குற்றச்சாட்டை தொடர்ந்து நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா விரிவாக்க பணிக்காக ஏ.எம்.ஆர்.எல் நிறுவனத்திடம் போடப்பட்ட ஒப்பந்தத்தை தமிழக அரசு சில நாட்களுக்கு முன்பு ரத்து செய்தது. மேலும், நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா விரிவாக்கத்திற்காக ஏ.எம்.ஆர்.எல் நிறுவனத்திடம் ஒப்படைத்த 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கைப்பற்றியுள்ளது. அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தின் போது திமுக அரசின் மோசடிகளை மக்கள் மத்தியில் புரட்சித்தாய் சின்னம்மா எடுத்துரைத்ததன் எதிரொலியாக வேறுவழியே இன்றி அவசர, அவசரமாக தமிழக அரசு நிலத்தை கைப்பற்றியுள்ளது.