எழுத்தின் அளவு: அ+ அ- அ
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, திருநெல்வேலி மாவட்டத்தில் "அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தின்"போது, சட்டவிரோதமாக கனிம வளங்கள் பெருமளவில் கடத்தப்படுவது குறித்துப் பேசினார். இதில் திமுகவினருக்கு உள்ள தொடர்புகள் பற்றியும் எடுத்துக்கூறினார். இதனைத் தொடர்ந்து, கனிம வளங்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிக்கொண்டு, கேரளா நோக்கிச் சென்ற 5 லாரிகளை வள்ளியூர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழக மக்களின் உரிமைகளைக் காப்பாற்றிடவும், திமுக தலைமையிலான ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு தோலுரித்துக் காட்டிடவும், பெண்ணினத்தின் பாதுகாப்பை பேணிக் காத்திடவும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இடங்களில் புரட்சித்தாய் சின்னம்மா நேற்று, அம்மாவின் வழியில் மக்கள் பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களில் பொதுமக்களை சந்தித்துப் பேசினார். நாங்குநேரி, மக்கள் சந்திப்பின்போது உரையாற்றிய புரட்சித்தாய் சின்னம்மா, திருநெல்வேலி மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளை பெருமளவில் நடப்பது பற்றி எடுத்துக் கூறினார். அனுமதிக்கப்பட்ட அளவைவிட பன்மடங்கு அதிகமான கனிமவளங்கள் சட்டவிரோதமாக கேரளாவுக்கு கடத்தப்படுவது பற்றியும், இந்த முறைகேட்டில் திமுகவினருக்கு உள்ள தொடர்பு குறித்தும் புரட்சித்தாய் சின்னம்மா விளக்கமாக எடுத்துரைத்தார்.
புரட்சித்தாய் சின்னம்மா நாங்குநேரியில், இவ்வாறு குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இன்று ராதாபுரம் பகுதியில் இருந்து கனிம வளங்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கிச் சென்ற 5 லாரிகளை வள்ளியூர் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தீவிர விசாரணையும் நடைபெறுகிறது.