எழுத்தின் அளவு: அ+ அ- அ
லண்டன் நகரில் தனது முதல் சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தும் பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்பட்டுள்ள இசைஞானி இளையராஜாவின் பயணம் இறைவனின் அருளால் வெற்றி பயணமாக சிறப்புடன் அமையட்டும் என ஆண்டவனை வேண்டுவதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா, வருகின்ற 8ஆம் தேதி லண்டன் நகரில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் தனது முதல் சிம்பொனி இசை நிகழ்ச்சியை நிகழ்த்த இருப்பது நமது தாய் மண்ணிற்கும், இந்திய திருநாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளதாக புகழாரம் சூட்டியுள்ளார். வேலியன்ட் எனும் தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள சிம்பொனியை நேரடியாக அரங்கேற்றவுள்ள இசைஞானி இளையராஜாவுக்கு தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்தும், ஐந்தாயிரம் பாடல்களுக்கு மேல் படைத்துள்ளதன் மூலம் இசை சாம்ராஜ்யத்தின் தன்னிகரற்ற ஜாம்பவானாக விளங்கும் இசைஞானி இளையராஜா, தமிழர்களின் திறமையை உலக நாடுகளின் பார்வைக்கு கொண்டு செல்வது மிகவும் பெருமையளிக்கிறது என்றும், உலகிலேயே தலைசிறந்த இசை திருவிழாவாக நடைபெற உள்ள சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்பட்டுள்ள இசைஞானி இளையராஜாவின் பயணம் இறைவனின் அருளால் வெற்றி பயணமாக சிறப்புடன் அமையட்டும் என ஆண்டவனை வேண்டுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.