சிம்ஸ்-பூங்காவில்-பழக்கண்காட்சி-இன்று-தொடக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-


குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தொடங்கியுள்ள 64வது பழ கண்காட்சியில் பலவிதமதான பழவகைகளில் வடிவமைக்கப்பட்டுள்ள மிருக உருவங்கள் பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. 3 நாட்கள் நடைபெறும் பழ கண்காட்சி குறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலாப் பயணிகளை கவர கோடை விழா நடத்தப்படுகிறது. இதில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, வாசனை பொருள் கண்காட்சி, படகு போட்டி, காய்கறி கண்காட்சி, பழக் கண்காட்சி உட்பட‌ பல்வேறு நிகழ்ச்சிகள் தோட்டக்கலை துறை சார்பில் நடத்தப்படும். இந்த ஆண்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் மலர், ரோஜா மற்றும் பழக் கண்காட்சிகள் மட்டுமே நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி நிறைவடைந்த நிலையில், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64வது பழக்கண்காட்சி தொடங்கியது.

1874ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிம்ஸ் பூங்கா, கடல் மட்டத்திலிருந்து 1790 மீட்டர் உயரத்தில் உள்ளது. 12 ஹெக்டர் பரப்பளவில் சரிவு மற்றும் மேடான நிலப்பரப்பில் அமைந்துள்ளது. சிம்ஸ் பூங்கா தொடங்கி இந்த ஆண்டுடன் 150 ஆண்டுகள் நிறைவடைவதால் 150 வகை பழங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக நீலகிரியில் உள்ள பிளம்ஸ், மங்குஸ்தான், பீச், ரம்பூட்டான், துரியன், வெல்வெட் ஆப்பிள் உள்ளிட்ட பழங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் விதமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழக்காட்சியில் பங்கேற்கும் போட்டி அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் விதவிதமான பழவகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

2000 கிலோ திராட்சைகளால் பிரம்மாண்ட கிங்காங் உருவம், mickey mouse பொம்மை, panda கரடி, dragon, Light house, அன்னப்பறவை, ஒட்டகம், தேனீ, இந்தியா கேட் ஆகியவை பல்வேறு விதமான பழங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64 ஆண்டுகளில் முதன்முறையாக இந்த ஆண்டு மூன்று நாட்கள் பழ கண்காட்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Night
Day