சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு - பள்ளி தாளாளர், ஆசிரியர்கள் உள்பட 4 பேர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாவட்டம் கே.கே.நகர் பகுதியில் தனியார் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கே.கே.நகர் தனியார் மழையர் பள்ளியில் ஆருத்ரா என்ற சிறுமி பயின்று வந்தாள். இந்த சிறுமி இன்று காலை பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளார். சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக தண்ணீர் தொட்டியில் கிடந்த குழந்தையை தீயணைப்புத்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day