எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை வடபழனியில் சிறுவன் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில், படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை வடபழனி பகுதியை சேர்ந்தவர் ஷாம். இவர், கடந்த 7ம் தேதி காரை வீட்டிற்கு முன் நிறுத்திவிட்டு தனது 14 வயது மகனிடம் சாவியை கொடுத்து கார் மீது கவர் போடுமாறு கூறியுள்ளார். ஆனால், அந்த சிறுவன் தனது நண்பரை காரில் ஏற்றிக்கொண்டு குமரன் நகர் சாலையில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது, சிறுவனின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்ற ஆட்டோ மற்றும் நடந்து சென்ற முதியவர் உள்ளிட்ட இருவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்து தொடர்பாக தந்தை மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்தில் சிக்கி படுகாயமடைந்த முதியவர் மஹாலிங்கம் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.