எழுத்தின் அளவு: அ+ அ- அ
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு 50 ரூபாய் உயர்த்தியிருப்பதன் மூலம் ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு நிதிச்சுமை ஏற்படுவதுடன் அவர்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கக்கூடும் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். இந்த விலை உயர்வு முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையினை 50 ரூபாய் உயர்த்தியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது என தெரிவித்துள்ளார்.
எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்த போதும், இது சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய அளவில் நிதிச்சுமையை ஏற்படுத்தும் - மேலும், இதன் மூலம் ஏழை, எளிய, சாமானிய மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கக்கூடும் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியபோதும், பெட்ரோல், டீசல் விற்பனை விலையில் உயர்வு இருக்காது என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்திருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது என கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
ஏழை, எளிய, சாமானிய மக்கள் குறிப்பாக பெண்கள் அன்றாடம் பயன்படுத்துகின்ற மிகவும் இன்றியமையாத தேவையாக இன்றைக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் மாறியிருக்கிறது - சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தாத வீடுகளே இல்லை என்ற அளவுக்கு இன்றைக்கு நாம் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளோம் -
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, சாமானிய மக்களை நேரடியாக பாதிக்கக்கூடிய வகையில் இருப்பதினால் மத்திய அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்து, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.
அதேபோன்று, தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளை கடந்துவிட்டது - சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியமாக வழங்குவதாக கடந்த தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதியை, இப்பொழுதாவது நிறைவேற்றி சாமானிய மக்களின் சுமையை குறைக்க முன் வரவேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்வதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.